×

புதுநல்லூர் பகுதியில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்: புதுநல்லூர் பகுதி நொடுஞ்சாலை ஓரத்தில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யபட்டுள்ளது.

தற்போது, முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதுார் கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா, சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, பணியை துவங்கி வைத்தார். இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசீலன், ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post புதுநல்லூர் பகுதியில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pudunnallur ,Sripurudur ,Pudunallur highway ,Moe Andarasan ,Pudunalore ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு தனியார்...