×

வெளிநாட்டில் சிக்கிய பெண்ணை அழைத்து வருவதாக கூறி பண மோசடி

விழுப்புரம், ஜூன் 13: விழுப்புரம் அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவரது மகள் சித்ரா(26). கோலியனூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த 10 மாதத்திற்கு முன்பு சித்ராவை, மலேசியாவில் வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற சித்ரா வேலை பிடிக்கவில்லை என்று 3 மாதத்தில் திரும்பி வருகிறேன் என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரிடம் ரூ.53,000 கொடுத்து ஏஜெண்டுகள் மூலம் தனது மகளை மீட்டு வருமாறு கூறியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட ரவி, சித்ராவை சொந்த ஊருக்கு அழைத்து வராமலும், கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து சிவகுமார் கேட்டபோது ரவியின் மகன் உதயராஜ்(30), சிவக்குமாரையும், அவரது மருமகள் திவ்யாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகுமாரின் மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெளிநாட்டில் சிக்கிய பெண்ணை அழைத்து வருவதாக கூறி பண மோசடி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Sivagamar ,Chitra ,Samathapuram ,Ramesh ,Golianur ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி