×

கோயில் வளாகத்தில் அமர்ந்து மதுகுடித்ததை தட்டிக்கேட்டவரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(22). இவர், கடந்த 10ம் தேதி இரவு அங்குள்ள கோயில் வளாகத்தில் உள்ள நாடக மேடையில் அமர்ந்து நண்பர் சுப்பிரமணியுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இதை சிலர் தட்டி கேட்டுள்ளனர். அவர்களை லட்சுமணன் திட்டி அனுப்பி உள்ளார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சுதாகர்(25), அவரது நண்பர் பாபு ஆகியோர் சென்று லட்சுமணனை அடித்து கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், வீட்டுக்கு ஓடி சென்று மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து சுதாகரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது குறி தவறி கோயில் சுவர் மீது குண்டுகள் பட்டு தெறித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் பிடிக்க முயலவே லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். புகாரின்படி லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மூலக்காடு பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை விலைக்கு வாங்கி, வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்துள்ளது.

The post கோயில் வளாகத்தில் அமர்ந்து மதுகுடித்ததை தட்டிக்கேட்டவரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Polur ,Lakshmanan ,Poongollaimedu village ,Periyakaram panchayat ,Thiruvannamalai district ,
× RELATED போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40...