×

பள்ளி செல்லும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து: முதல்வர் டிவிட்

சென்னை: பள்ளி செல்லும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துகள் என்றும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று (நேற்று) முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள். நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும். நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பள்ளி செல்லும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Principal ,DeWitt ,Chennai ,Chief Minister ,David ,Dinakaran ,
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி