×

ஒடிசா ரயில் விபத்து 5 அதிகாரிகளிடம் விசாரணை

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 5 ரயில்வே அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையப்பகுதியில் 3 ரயில்கள் மோதியதில்288 பேர் பலியானார்கள். விபத்து குறித்து பஹானகா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் 4 சிக்னல் ஊழியர்களிடம் ரயில்வே விசாரணை ஆணையம் முதற்கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விபத்துக்கு முக்கிய காரணம் அவர்கள் பணிதான் என்பதால் அவர்களிடம் தனித்தனியாக ஆணையர் விசாரணை நடத்தி உள்ளார். இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதனடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

The post ஒடிசா ரயில் விபத்து 5 அதிகாரிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,New Delhi ,Balasore, Odisha ,Odisha train ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...