×

13 ஓலைச்சுவடி கட்டுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: நெல்லையப்பர் கோயிலில் தேவாரம் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோயிலில் தேவாரம் ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதன்படி அறநிலையத்துறையில் ஓலைச்சுவடி ஆய்வாளர்கள் மற்றும் ஆவணப்படுத்துபவர்கள் 12 பேர் குழுவினர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இருக்கும் ஓலைச்சுவடிகளை எடுத்து பராமரிக்கவும் ஆவணப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வரிசையில் நெல்லையில் 7ம் நூற்றாண்டில் தோன்றிய வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதியம்மன் திருக்கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணி கடந்த 5ம் தேதி தெரடங்கியது. அறநிலையத்துறையை சேர்ந்த 2 பேர் சென்னையில் இருந்து வந்து முகாமிட்டு இங்குள்ள 12 ஓலைச்சுவடி கட்டுகளை எடுத்து தூசி படிந்து இருந்தவற்றை சுத்தப்படுத்தி புல் எண்ணெய் தடவி பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த கோயிலில் வேறு ஏதும் ஓலைச்சுவடிகள் இருக்கிறதா என தேடிப் பார்த்தபோது தேவாரம் தொடர்பான ஓலைச்சுவடி பெரிய கட்டு கிடைத்தது.

இது அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் அதிக பக்கங்கள் இருப்பதால் இதில் உள்ள தகவல்களை தற்போதைய தமிழ் மொழியில் ஆவணப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் 10 நாட்கள் இந்த ஓலைச்சுவடிகளை முதற்கட்ட பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து அதில் உள்ள கருத்துக்கள் எழுத்து வடிவில் ஆவணப்படுத்தப்பட உள்ளன. தேவாரம் ஓலைச்சுவடியில் உள்ள விபரங்கள் முழுமையாக தெரியவரும் போது நெல்லை மற்றும் நெல்லையப்பர் கோயில் குறித்த மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

The post 13 ஓலைச்சுவடி கட்டுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: நெல்லையப்பர் கோயிலில் தேவாரம் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Dewaram ,Nelliyapar Temple ,Dewaram Olivududi ,Nella ,Swami Nelliyapar Temple ,Godheyapar Temple ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு