×

பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

குஜராத்: பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜூன் 15-ம் தேதி புயல் கரையைக் கடக்கக் கூடும் என்பதால், ஜூன் 16 வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது ‘பிபர்ஜாய்’ புயலாக உருவெடுத்துள்ளதால், வரும் 15ம் தேதி குஜராத்தை கடுமையாக தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது ‘பிபர்ஜாய்’ புயலாக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த புயலானது குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 420 கிமீ தெற்கு – தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 460 கிமீ தெற்கு – தென்மேற்கிலும் அதி தீவிர புயலாக மையம் கொண்டுள்ளது. வரும் 15ம் தேதி குஜராத்தின் மான்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே அதி தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல் மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வரும் 15ம் தேதி நண்பகல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 1 மணி அளவில் ஆலோசனை நடத்தினார். மேலும் பிபர்ஜாய் புயலால் மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானங்கள் பல தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிபர்ஜாய் புயல் ஜூன் 15-ம் தேதி புயல் கரையைக் கடக்கக் கூடும் என்பதால், ஜூன் 16 வரை
குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 முதல் 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat's Gulf of Kutch ,Gujarat ,Cyclone ,Gujarat's ,Gulf of Kutch ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...