×

பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும்: குஷ்பு பேட்டி

சென்னை: திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர் எதற்கு பொய் சொல்ல வேண்டும். விரிவான தகவல்களை அளிப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார் என்று குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.

ஆரணி அருகே தனது மனைவியை தாக்கி மானபங்கம் செய்ததாக ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோவுக்கு திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி. படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரிடமிருந்து மேல் வடைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

கடை சம்பந்தமாக கீர்த்திக்கும், ராமு என்பவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் ராமுவை கீர்த்தியின் சகோததரர் ஜீவா கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன் மனைவியை சிலர் தாக்கி மானபங்கம் செய்ததாக ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டதுடன் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள திருவண்ணாமலை எஸ்.பி. ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை யாரும் தாக்கவோ, மானபங்கம் செய்வோ இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து மேல் வாடகைக்கு எடுக்கப்பட்ட கடையை காலி செய்யாமல் கீர்த்தி தரப்பினர் முரண்டு பிடித்ததால் அருகில் இருந்த கடைக்காரர்கள் சிலரே பேன்சி கடைகளில் பொருட்களை எடுத்து வீசியதாகவும் எஸ்.பி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.

கீர்த்தியின் சகோதரர் ஜீவா என்பவர் தாக்கியதில் தான் ராமு என்பவர் காயமடைந்து இருப்பதாகவும் யாரும் வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் விரிவான தகவல்களை அளிப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார் என்று குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.

The post பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும்: குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Women's Commission ,Kushbu ,Chennai ,Thiruvannamalai ,
× RELATED பாலியல் புகாரில் ஒட்டுமொத்த...