×

உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் நன்றி..!!

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு, உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தையும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். வருடந்தோறும் ஜூன் 12ம் தேதி என்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு சுப முகூர்த்த நாளாகும். அன்றைய தினம் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தால் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக விளங்குவது வழக்கம். கடந்த 2021ம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற பின்பு தொடர்ந்து 3வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறப்பதால் காவிரி டெல்டா பிரதேசத்தில் வசந்தம் வீசுகிறது.

குறுவை நெல் சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதுமட்டுமின்றி முன்கூட்டியே கால்வாய்கள் தூர்வாரப்பட்டதா என முதலமைச்சர் ஆய்வு செய்ததற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிறு, குறு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் விதைநெல், உரம் உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதற்கு தஞ்சை விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

ஏற்கனவே மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது உறுதி செய்யப்பட்டதால் 15 நாட்களுக்கு முன்பே குறுவை சாகுபடிக்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளை விவசாயிகள் முடித்துள்ளனர். மேலும் அதிகளவு பாய் நடவு நாற்றுகளை உற்பத்தி செய்துள்ளதால் மகசூல் கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post உடனடியாக குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. ,Stalin ,Caviri Delta Farmers ,Thanjana ,Mattur dam ,Kaviri Delta ,B.C. ,G.K. ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...