×

காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட விவகாரம்: நவீன் பட்டேலுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக குருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேலுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் தென்காசியில் உள்ள குற்றாலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் பெற்றோர், உறவினர் என 15 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் குருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல் உடன்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் குருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல் ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது குருத்திகா பட்டேல் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை, தனக்கு குஜராத்தில் திருமணம் நடந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, குருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல் சாட்சியங்களை களைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என தெரிவித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட விவகாரம்: நவீன் பட்டேலுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kurthika Patel ,Madurai High Court ,Naveen Patel ,Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...