×

இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

சென்னை: இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிலையில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக அல்லாமல் இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக உள்ளது. நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

The post இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chief Minister ,MJ G.K. stalin ,Chennai ,Mueller ,G.K. Stalin ,B.C. ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...