×

சூடான் நாட்டின் தலைநகரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தால் அமைதி நிலவியதாக தகவல்..!!

கார்ட்டூம்: சூடான் தலைநகரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து அமைதி நிலவுகிறது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இருதரப்பு சண்டையை நிறுத்துவதற்காக ஜூன் 9 அன்று சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் சமரச முயற்சியின்படி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. சூடானில் முரண்பட்ட கட்சிகள் இந்த 24 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டின.

இது சனிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சூடானில் உள்நாட்டு போரில் உள்ளூர் ஊடகங்களில் முழுமையற்ற புள்ளி விவரங்களின்படி மோதலில் இதுவரை 1800க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். சுமார் 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் கார்ட்டூமில் அமைதி நிலவியதாக சூடான் ஆயுதப்படைகள் மற்றும் விரைவு ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன.

The post சூடான் நாட்டின் தலைநகரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தால் அமைதி நிலவியதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Sudan ,Khartoum ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு