×

பொள்ளாச்சி அருகே நகை வியாபாரியிடம் ரூ.1.27 கோடி கொள்ளை: மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது..!!

கோவை: பொள்ளாச்சி அருகே நகை வியாபாரியிடம் ரூ.1.27 கோடி கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு வங்கி மேலாளர் ஒருவர் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் பிரகாசுக்கு அறிமுகமாகியுள்ளார். குட்டி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளை தந்தால், ஒரு கோடி ரூபாய்க்கு ரூ.15 லட்சம் கமிஷன் கிடைக்கும் என பிரகாஷிடம் குட்டி தெரிவித்துள்ளார். அதனை நம்பி ரூ.1,27,50,000 தொகையுடன், பிரகாஷ், வங்கி மேலாளர், ஓட்டுநர் ஆகியோர் காரில் பொள்ளாச்சி சென்றுள்ளனர். அப்போது குறிப்பிட்ட இடத்தில் பெண் உட்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது குட்டி உட்பட 6 பேர் திடீரென பிரகாஷை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, மூன்று கார்களில் தப்பி சென்றனர். இது குறித்து பிரகாஷ் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தர். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் பெண் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளை வழக்கில் 6 தனிப்படைகள் அமைப்பட்டு தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ரூ.1 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் தருகிறோம் என்று கூறி மோசடி செய்த மர்மநபர்கள் சின்னகுட்டி, மீனாட்சி, பாண்டியன், அழகர்சாமி, செளமியான், கவாஸ்கர் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

The post பொள்ளாச்சி அருகே நகை வியாபாரியிடம் ரூ.1.27 கோடி கொள்ளை: மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Govai ,Govai Telungapalayam Meenatchi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...