×

அகில இந்திய அளவில் மருத்துவ பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களின் முன்னுரிமை பறிபோகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

சென்னை: அகில இந்திய அளவில் மருத்துவ பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை பறிபோகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். அகில இந்திய அளவிலான மருத்துவ பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்திருக்கிறார். எம்பிபிஎஸ் பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதிருந்தும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்படும் போது தமிழக மாணவர்கள் அவர்களுக்கான முன்னுரிமைக்கான இடங்கள் பறிபோகும் என்பது முக்கியமான கருத்தாகும். தமிழ்நாட்டில் பொறுத்தவரை இந்தியவிலையே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் இந்த அளவில் மருத்துவ கல்லூரிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள், மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 70 க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன, அதனால் எம்பிபிஎஸ் என எடுத்துக்கொண்டால் 6,500 அதிகமான அரசு இடங்கள் மட்டுமே உள்ளது. ஒட்டுமொத்தமாக எம்பிபிஎஸ் இடங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரி இடங்கள் பார்க்கவேண்டும் என்றல் 12,025 மேற்பட்ட இடங்கள் நமக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது கலந்தாய்வு நடத்தப்படும் போது அவை பிரமாநிலம் மாணவர்களுக்கு அதிகமான சாதகம் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், அவை தமிழ்நாட்டு மாணவரக்ளுக்கு பலனளிக்கும் விதமாக இருக்கவேண்டும், தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலம் மாணவர்கள் அதிக எண்ணிக்கை இங்கு வந்து தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய கல்லூரிகளில் நம் தமிழ்நாடு மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகக்கூடிய சூழல் இருக்கிறது என்பதனால் இந்த பொது கலந்தாய்வு நடத்துவதற்கு விடமாட்டோம், உங்களுடைய எதிர்ப்பை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று தெரிவிப்போம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

The post அகில இந்திய அளவில் மருத்துவ பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களின் முன்னுரிமை பறிபோகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,Chennai ,Maharashtra ,Minister Maharashtra ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...