×

2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனாவின் டிராகன் படகு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்..!!

பெய்ஜிங்: சீனாவில் யான்செங் நகரில் பாரம்பரிய டிராகன் படகு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. சீன காலண்டரின் 5 வது மாதத்தின் நடைபெறும் டிராகன் படகு திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாகாணங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு குழுக்கள் என அனைத்து பிரிவுக்கான படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியை காண சீனர்கள் மட்டுமின்றி ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்களும் அதிக ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

38 அணிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டிராகன் படகு போட்டியில் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர், 500 மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 3 பிரிவுகளிலும் புஸோசெங்கில் என்ற டிராகன் படகு குழு ஆடவர் அணி முதல் இடம் பெற்றது. அதேபோல மகளிர் பிரிவில் ஜிங்குவா, லயோசிங் பல்கலைக்கழகம் ஆகிய அணிகள் பரிசுகளை தட்டி சென்றனர். 2500 ஆண்டுகள் பழமையான டிராகன் படகு திருவிழா சீனாவில் ஆண்டுதோறும் விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

The post 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனாவின் டிராகன் படகு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்ற வீரர், வீராங்கனைகள்..!! appeared first on Dinakaran.

Tags : Chinese Dragon Boat Races ,BEIJING ,Yancheng, China ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...