×

பிபோர்ஜாய் புயல் தொடர்பான நிலைமை ஆய்வு: பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

புதுடெல்லி: பிபோர்ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் புயல், இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. தற்போது சூப்பர் புயலாக பைபர்ஜோய் உருவெடுத்துள்ளது, இப்புயல் ஜூன் 15ம் தேதியன்று குஜராத்- பாகிஸ்தானின் கராச்சியை ஒட்டி கரையை கடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள அதிதீவிர புயலான பிபோர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 1 மணி அளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள பிபோர்ஜோய் என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும் என தெரிவித்துள்ளனர். தீவிர புயலாக மாறியுள்ள இந்த பிபோர் ஜாய் வரும் 15ம் தேதி சவுராஷ்டிரா – கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

புயல் மும்பை கடல் பகுதியை நெருங்கியுள்ளது, கடல் சீற்றமாக காணப்படுகிறது, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, இன்று பிற்பகல் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பிபோர்ஜாய் புயலின் தாக்கம் குறித்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிபோர்ஜாய் புயல் தொடர்பான நிலைமை ஆய்வு: பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Prime Minister Narendra Modi ,New Delhi ,Narendra Modi ,Biborjai cyclone ,Dinakaran ,
× RELATED மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!:...