×

கீழ்பவானி பாசன வாய்க்காலில் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்..!!

ஈரோடு: கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கீரிட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோபி பகுதியில் 10 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் அஞ்சல் மங்களப்பட்டி வரை சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ் பவானி பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டு தோறும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இவை தவிர கீழ் பவானி வாய்க்காலின் கசிவு நீர் திட்டங்கள் மூலமாக பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் பாசன வாய்க்காலில் கான்கீரிட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கசிவு நீர் திட்ட பாசன பகுதிகள் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் முழுமையாக பாதிக்கப்படும் என கூறி இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோபி அருகே அழுகுளி, கரட்டு பாளையம், குருமந்தூர், கூடகரை உள்ளிட்ட 10 ஊராட்சிகளிலும் உள்ள 500 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் போனதால் மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கீழ் பவானி பாசன வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் கான்கீரிட் தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கீழ்பவானி பாசன வாய்க்காலில் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Erode ,Kilibawani ,Gopi area ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்