×

உடன்குடியில் பைக்குகள் மோதலில் வாலிபர் படுகாயம்

 

உடன்குடி, ஜூன் 12: உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கட்டேரிபெருமாள்(25). உடன்குடி பஜாரில் உள்ள மாவு மில்லில் இயந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ம் தேதி உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பைக்கில் சென்றுள்ளார். உடன்குடி பஜார் பகுதியில் செல்லும் போது உடன்குடி செல்வபுரத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் ஓட்டி வந்த பைக், கட்டேரிபெருமாள் பைக் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த கட்டேரிபெருமாளை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்டேரி பெருமாள் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உடன்குடியில் பைக்குகள் மோதலில் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Udangudi ,Ebenkudi ,Kateriperumal ,Rajendran ,Andevilai ,Theriyur ,Udukudi ,
× RELATED வாய்க்கால் பாசனத்தை நம்பி இருப்போர்...