×

திடக்கழிவு மேலாண் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை

இளம்பிள்ளை, ஜூன் 12: இடங்கணசாலை நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமான அளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் அல்லது 5000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடங்களை பயன்படுத்தும் மத்திய, மாநில அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுதலங்கள், விளையாட்டு அரங்குகள், துணி விற்பனையாளர்கள், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சந்தை ஒப்பந்தம் எடுத்தோர் ஆகியோர் அதிக கழிவுகளை உருவாக்குபவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, நாள் ஒன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் கழிவுகள் உற்பத்தி விகிதத்தை கொண்டிருக்கின்ற நிறுவனங்கள், குடியிருப்புகள், வணிக பகுதிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் 100 கிலோவிற்கு அதிகமாக கழிவுகளை உருவாக்குபவர்கள், நகராட்சி அலுவலகத்தை அணுகி பதிவு செய்து, தங்கள் வளாகத்திற்குள் உருவாகும் கழிவுகளை செயலாக்கம் செய்து மறு சுழற்சி செய்வதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மொத்த கழிவுகளை உருவாக்குபவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திடக்கழிவு மேலாண் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Itanganasala Municipality ,
× RELATED ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்