×

சத்தி சுற்றுவட்டாரத்தில் பரவலான மழை

 

சத்தியமங்கலம்,ஜூன்12: சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.இதற்கிடையே நேற்று மாலை திடீரென காற்று வீசியதோடு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது. தற்போது பெய்த மழை சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post சத்தி சுற்றுவட்டாரத்தில் பரவலான மழை appeared first on Dinakaran.

Tags : Satti ,Sathyamangalam ,Bhavanisagar ,Sathya ,Dinakaran ,
× RELATED வாழை மர தண்டில் இருந்து கூடை செய்தல் குறித்து செயல் விளக்கம்