×

முதியவர்களிடம் வங்கி பெண் ஊழியர் அதிகார லஞ்சம் ரூ.1,500 உதவித்தொகைக்கு ரூ.50 கட்டாய வசூல் வேட்டை: லஞ்ச நோட்டு கிழிந்திருந்தால் வாங்க மாட்டாங்களாம்…

சேலம் 4 ரோடு, சத்திரம், சாமிநாதபுரம், அரிசிபாளையம், பள்ளப்பட்டி பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட முதியவர்கள், அரசின் முதியோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள கனரா வங்கி மூலம் பணம் மாதந்தோறும் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் முதல் 5 தேதிக்குள் வங்கிக்கு முதியோர்கள் திரண்டு வந்து, வரிசையில் நின்று தங்களது வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து உதவித்தொகை ரூ.1,500ஐ பெற்றுச் செல்கின்றனர். இந்த உதவித்தொகையை வங்கியின் பெண் ஊழியர் ஒருவர், பட்டுவாடா செய்கிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன் முதியோர் உதவித்தொகையை அந்த ஊழியர் வழங்கினார். அப்போது, மூதாட்டிகள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பணத்தை பெற்றபோது, 50 ரூபாய் கட்டாய வசூலில் அந்த ஊழியர் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், வங்கி பெண் ஊழியரிடம் பாஸ் புக்கை கொடுத்து உதவித்தொகை பெறும் ஒரு மூதாட்டி, தன்னிடம் இருந்த 30 ரூபாயை (10 ரூபாய் நோட்டாக) கொடுத்தார்.

அதனை வாங்கிய பெண் ஊழியர், எல்லாம் கிழிந்திருக்கிறது, வேற நோட்டை 50 ரூபாயாக கொடு எனக்கூறுகிறார். அதற்கு அந்த மூதாட்டி, அடுத்து வரும்போது நல்ல நோட்டாக சேர்த்து தருகிறேன், எனக்கூறுகிறார். உடனே ஞாபகமாக அடுத்த மாதம் தர வேண்டும் எனக்கூறி அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து மற்ற முதியவர்களிடமும் ரூ.50 வசூலித்துக் கொண்டு உதவித்தொகையை வழங்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைலராக பரவியதையடுத்து, வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர்களிடம் வங்கி பெண் ஊழியர் அதிகார லஞ்சம் ரூ.1,500 உதவித்தொகைக்கு ரூ.50 கட்டாய வசூல் வேட்டை: லஞ்ச நோட்டு கிழிந்திருந்தால் வாங்க மாட்டாங்களாம்… appeared first on Dinakaran.

Tags : Bank Female Employees Authority ,Salem 4 Road, ,Chandram, ,Saminathapuram ,Arisipalayam ,Schoolpatti ,
× RELATED சேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு