×

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 13, 14ம் தேதி பராமரிப்பு பணி: தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 13ம் தேதி முதல் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் 13ம் தேதி காலை 6 மணி முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

The post மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 13, 14ம் தேதி பராமரிப்பு பணி: தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Seawater Drinking Station ,Meenchur ,Chennai Drinking Water Board ,Chennai ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...