×

அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இடங்களில்
பரவியுள்ளது. நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜாய் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05:30 மணி அளவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, 08:30 மணி அளவில் அதே பகுதியில் மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் குஜராத் இருந்து தென் – தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று, 14.06.2023 காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15.06.2023 அன்று 1130 – 1430 மணி அளவில் மிக தீவிர புயலாக, மாண்டிவி குஜராத் மற்றும் கராச்சி பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 160 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 195 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சௌராஷ்டிரா- கட்ச் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,New Dugu ,Middle East Arab Seas ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...