×

தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டத்தில் 9,500 ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். விவசாயிகள் நிலத்தை உழுது தயாராக வைத்திருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக பருவமழை கைகொடுத்ததால் ஆறு, கண்மாய்கள் ‘குளிர்ந்தன’. தற்போது வடகிழக்கு பருவ மழை கைவிட்ட நிலையில் ஜூனில் தென் மேற்கு பருவமழையை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ஜூன் மாதம் தொடங்கும் மழையை நம்பி 9,500 ஹெக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி நடக்கிறது இது நல்ல விளைச்சலையும் தந்தது.

இந்தாண்டு இந்த மாதம் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு போகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்கான சன்னரக நெல் விதைகள் 300 டன் அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் தயாராக உள்ளது. கடந்தாண்டு தட்டுப்பாடாக இருந்த யூரியா போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. யூரியா 6000 டன், டி.ஏ.பி. 1800 டன், பொட்டாஷ் 850 டன், காம்ப்ளக்ஸ் உரம் 6400 டன், எஸ்.எஸ்.பி 800 டன் உரங்கள் இருப்பில் உள்ளது. விவசாயிகளும் கோடை உழவு செய்து சாகுபடிக்கு தயாராக உள்ளனர். விதைகளும், உரங்களும் இருப்பில் உள்ளதால் மழையை எதிர் நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

The post தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Southwest Monsoon ,Kuruva ,Southwest ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை