×

ரூ.2 லட்சம் பட்டாசு பறிமுதல்

 

சிவகாசி, ஜூன் 10: சிவகாசியில் அச்சகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் அய்யாசாமி(36). இவர் சுப்பிரமணியபுரம் காலனி 9வது தெருவில் சிவா ஸ்கோரிங் என்ற பெயரில் அச்சகம் நடத்தி வருகிறார். இங்கு அனுமதி, உரிமம் இன்றி எளிதில் வெடிக்க கூடிய முழுமையாக தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட பட்டாசுகளை கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை கைது செய்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

The post ரூ.2 லட்சம் பட்டாசு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் 84 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்