×

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றுக்கள் தயார்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றுகள் தயாராகி வருகிறது.நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் சித்தமல்லி, பரப்பனாமேடு, காளாச்சேரி, மேல பூவனூர், ராயபுரம், ரிஷியூர், அனுமந்தபுரம், கோவில்வெண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன் கூட்டியே கோடை சாகுபடி அறுவடை பணிகள் முடிந்து விட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வயல்களில் விடப்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால் விடப்பட்டு அது தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நாற்றுகள் இன்னும் 15, 20 நாட்களில் பறிக்கப்பட்டு குறுவை நடவு பணிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றுக்கள் தயார் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Chittamalli ,Parapanamedu ,Kalacherry ,
× RELATED கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்