×

வனத்துறை சார்பில் பொம்மலாட்ட கலைஞர்கள் மூலம்பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

 

பந்தலூர்,ஜூன்9:பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மனித விலங்கு மோதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வனசரகர் அய்யனார் தலைமையில் நடைப்பெற்றது.

சென்னை,வேலூர் பொம்மலாட்ட கலைஞர்கள் மூலம் ஆடல்,பாடலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். இரவு நேரங்களில் டார்ச் லைட் பயன்படுத்த வேண்டும். யானை விரும்பி உண்ணும் பயிர்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வாகனங்களை பயன்படுத்த வேண்டும். குடியிருப்பு அருகே உள்ள பலா மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

சிங்கோனா டேன்டீ,சேரங்கோடு, சேரம்பாடி சுங்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் வனவர் ஆனந்த் மற்றும் வனக்காப்பாளர்கள்,வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானை கண்காணிப்பு குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள்,நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வனத்துறை சார்பில் பொம்மலாட்ட கலைஞர்கள் மூலம்பொதுமக்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Cherambadi Vanacharagam ,Gudalur, Nilgiri district ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா