×

அரிசிக்கொம்பன் குமரியில் நுழைய முயற்சி

களக்காடு: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் யானை கடந்த 5ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேல் (அப்பர்) கோதையாறில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள முத்துக்குழி வயல் வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி அதிகாலை விடப்பட்டது. யானையின் நடமாட்டம் மற்றும் அதன் உடல்நிலை குறித்து கடந்த 3 நாட்களாக தேனி, ஒசூர் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அரிசிக் ெகாம்பன் யானை, முத்துக்குழி வயல், வழியாக குட்டியாறு அணைப்பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை வனப்பகுதிக்குள் நுழைய முயன்றது ரேடியோ காலர் கருவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் மற்றும் களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறையினர், அரிசிக்கொம்பனை தடுத்து கோதையாறு பகுதிக்கு மீண்டும் விரட்டினர். இதையடுத்து அரிசிக்கொம்பன் மீண்டும் நெல்லை மாவட்டம் கோதையாறு குட்டியாறு அணைப்பகுதியில் நடமாடி வருகிறது.

The post அரிசிக்கொம்பன் குமரியில் நுழைய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kampam ,Theni district ,Arisikkomban ,
× RELATED விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சேதம்