×

இத்தாலி நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய பெண் எம்.பி.: கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்..!

ரோம்: இத்தாலி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி., ஒருவர், அழுத தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இத்தாலி நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தான் பெண் எம்.பி.,க்கள் குழந்தையை பார்லிமென்டிற்கு அழைத்து வரவும், ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் 36 வயதான இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினரான கில்டா ஸ்போர்ட்டியெல்லோ என்பவர் நாடாளுமன்றத்துக்கு தனது 2 மாத ஆண் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது, குழந்தை திடீரென அழத் துவங்கியது.

இதனை கேட்ட நாடாளுமன்றம் அமைதியானது. குழந்தை பசிக்காக அழுவதை தெரிந்து கொண்ட கில்டா ஸ்போர்டெல்லோ அங்கேயே குழந்தையை அமைதிப்படுத்தி பாலூட்ட துவங்கினார். அப்போது, சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி அவரின் மகன் ஃபெடரிகோ “நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார்கள். இதன் மூலம் இத்தாலி நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய முதல் பெண் எம்.பி., என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post இத்தாலி நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய பெண் எம்.பி.: கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்..! appeared first on Dinakaran.

Tags : Italy ,M. GP ,Gaithati ,Rome ,Italy Parliament of Infant Lactation Girl ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்