×

சேதமடைந்து ஜல்லிக்கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறது கிழவன்கோவில் சாலை பதம்பார்க்குது காலை

வத்திராயிருப்பு, ஜூன் 8: கிழவன்கோவில்-பெரியாறு அணை இடையே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. கிழவன் கோவிலில் இருந்து பெரியாறு அணை வரை 2 கிலோ மிட்டர் தொலைவு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது. இதனால் கிழவன் கோவில், பட்டுப்பூச்சி நகர், ஜெயந்த் நகர், பெரியாறு அணை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நடந்து சென்றால்கூட ஜல்லி கற்கள் காலை பதம் பார்க்கிறது.

அதோடு டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் இந்த சாலையில் சென்றால் டயர்கள் பஞ்சராகி விடுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை போட வேண்டுமென கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் சிரமம் நீடித்து வருகிறது. எனவே கிழவன் கோவில்-பெரியாறு அணை இடையே புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிராமமக்கள் கூறுகையில், கிழவன்கோவில்-பெரியாறு அணை இடையே உள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. நடந்துகூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக உள்ளது. கிராமமக்கள் பெரும்பாலும் டூவீலர், சைக்கிளைதான் பயன்படுத்தி செல்கிறோம். அதுவும் சில நேரங்களில் டயர் பஞ்சராகிவிடுகிறது. எனவே சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.

The post சேதமடைந்து ஜல்லிக்கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறது கிழவன்கோவில் சாலை பதம்பார்க்குது காலை appeared first on Dinakaran.

Tags : Kivankoil ,Vathirayiru ,Kivankoil-Periyaru Dam ,Vathirayirupu… ,Kivankoil Road ,
× RELATED கோடையை குளிர வைத்த ‘மினி மழை’