×

இன்ஜின் கோளாறால் விமானம் தரையிறக்கம்; மாற்று விமானம் ரஷ்யா சென்றது

மும்பை: டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு ஏர்இந்தியா விமானம் நேற்றுமுன்தினம் சென்றது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். அப்போது, திடீரென விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவின் தொலைதூர நகரான மகாதன் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு விமானம் அங்கு தரையிறக்கப்பட்டது. மகாதன் நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்பி வைப்பதற்கு மாற்று விமானம் நேற்று மதியம் 1மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று காலை 6.30மணிக்கு மகாதனை சென்றடையும் என தெரிவித்துள்ளது.

The post இன்ஜின் கோளாறால் விமானம் தரையிறக்கம்; மாற்று விமானம் ரஷ்யா சென்றது appeared first on Dinakaran.

Tags : Russia ,Mumbai ,AirIndia ,Delhi ,San Francisco, USA ,Dinakaran ,
× RELATED போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா?.....