×

ஏ.பள்ளிப்பட்டியில் இறைச்சி கழிவுகளால் மாசடையும் சின்ன ஏரி

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சியில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம், சுற்றுவட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மேலும், பள்ளிப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. ஏ.பள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சிக்கன் கடை வைத்துள்ளவர்கள், சமீப காலமாக இரவு நேரத்தில் கோழி இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக வாகனத்தில் கொண்டுவந்து சின்ன ஏரியில் போட்டுச்செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஏரியின் தண்ணீர் மாசடைகிறது. இதனை மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் குடிக்கும் போது பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் கிடக்கும் இறைச்சி கழிவு மூட்டைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏ.பள்ளிப்பட்டியில் இறைச்சி கழிவுகளால் மாசடையும் சின்ன ஏரி appeared first on Dinakaran.

Tags : Pallipatti ,Pappirettipatti ,A. Pallipatti ,Dinakaran ,
× RELATED கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மூவர் கைது