×

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!!

அமெரிக்கா: அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் உள்ள காமன் வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா முடிந்து மாணவர்கள் பெற்றோருடன் வெளியே வந்த போது நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவரின் உடல் நிலை கவலை கிடமாக உள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து சிதறி ஓடியவர்களில் 9 வயது சிறுமி மீது கார் மோதியதில் அவர் காயமடைந்தார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பள்ளி மாணவனுக்கு நன்கு அறிமுகமானவர் தான் துப்பாக்கி சூட்டை நடத்தியது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

The post அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : US ,USA ,Virginia, USA ,Graduation Festival for ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...