×

கடன் தொல்லையால் சோகம் தாய், தந்தை, மகன் தற்கொலை

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு ஜெயபிரகாஷ், நந்தகுமார் (35), கோபி(30) ஆகிய மகன்களும் சசிரேகா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் ஜெயபிரகாஷ், சசிரேகா ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தற்கொலை செய்து கொண்டனர். கோபி திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நடேசனுக்கு சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சிந்தாமணி அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தார்.

நந்தகுமார் தச்சு தொழில் மற்றும் லாரி டிரைவராகவும் இருந்துள்ளார். திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும், நடேசன் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து எலச்சிபாளையம் போலீசார் வந்து சோதனையிட்டதில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘கடன் வாங்கிய நிலையில் திருப்பி செலுத்த முடியாததால், தற்கொலை செய்து கொள்கிறோம். மகன் புதைக்கப்பட்ட இடத்தில், எங்களது உடல்களையும் புதைக்க வேண்டும்,’ என எழுதப்பட்டிருந்தது.

The post கடன் தொல்லையால் சோகம் தாய், தந்தை, மகன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Natesan ,Vaiyappamalai Nadupalayam ,Mallasamuthram ,Namakkal district ,Chintamani ,
× RELATED பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்ட தனியார் மேலாளர் மீது வழக்கு