×

ஒடிசா ரயில் விபத்து.. பலியானவர்களை அடையாளம் காண உதவி எண்கள் அறிவிப்பு!!

புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் பலியான 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், உடல்களை உறவினர்கள் கண்டறியும் வகையில் ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறி, கிளைப்பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. அவை, மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே ஒடிசா ரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 275 பேரில், 101 பேர் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 55 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்களைக் கண்டறிய ரெயில்வே ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. 139, 18003450061 அல்லது 1929 என்ற உதவி எண்களுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என்று ரெயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து.. பலியானவர்களை அடையாளம் காண உதவி எண்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Odisha Rail ,Bubaneshwar ,Odisha ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு