சிவகங்கை, ஜூன் 5: சிவகங்கையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் தேங்கிய நிலையில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை நகராட்சி, தீயணைப்புத் துறை, மற்றும் எல் அண்ட் டி நிறுவனம் இணைந்து இப்பணியை தொடங்கினர்.
30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பைபர் படகில் சென்று பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மேற்கொண்டனர். சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி(பொ), சிவகங்கை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன், எல் அண்ட் டி நிறுவன திட்ட மேலாளர் பிரதீப் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post சிவகங்கை நகர் பகுதியில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணி துவக்கம் appeared first on Dinakaran.
