×

ஆஷஸ் அணியில் ஜோஷ் டங்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. மொத்த 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மொத்தம் 16 வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்துடன் நடந்த டெஸ்ட்டுக்கான அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அந்த போட்டியில் அறிமுகமான இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் (25 வயது) தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிராவ்லி, ராபின்சன், ஆண்டர்சன், டக்கெட், ஜோ ரூட், பேர்ஸ்டோ (கீப்பர்), டான் லாரன்ஸ், ஜோஷ் டங், பிராடு, ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ், ஹாரி புரூக், ஆலிவர் போப், மார்க் வுட், மேத்யூ பாட்ஸ்.

The post ஆஷஸ் அணியில் ஜோஷ் டங் appeared first on Dinakaran.

Tags : Josh Tung ,Ashes ,London ,England ,Australia ,Ashes Test ,Ireland ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் கீழ்...