×

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்தது

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மணிப்பூரில் 90க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய கலவரம் குறித்து விசாரணை நடத்த கவுகாத்தி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர்தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட 3 பேர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் மே 3ம் தேதியும், அதன் பிறகும் நடந்த கலவரங்களுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை விசாரிக்கும். இந்த விசாரணை ஆணையம் விரைவில் ஒன்றிய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்தது appeared first on Dinakaran.

Tags : Commission of Inquiry ,High Court ,Union Home Ministry ,New Delhi ,Chief Justice of ,High ,Court ,Manipur ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...