×

விபத்து நடந்த வழித்தடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு கருவி பொருத்தப்படவில்லை: ரயில்வே அதிகாரி தகவல்

இந்தியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க கவாச் எனும் நவீன தானியங்கி பாதுகாப்பு அமைப்பை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) உருவாக்கியது. கவாச் என்ற இந்தி சொல்லுக்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள். இந்த பாதுகாப்பு அமைப்பு, ரயில் சிக்னலை மீறி கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவும்.இதனால், கவாச் ரயில்வேயின் பாதுகாப்பை மேம்படுத்தும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பெருமிதம் தெரிவித்தார். இக்கருவியை மேம்படுத்த ரூ.16.88 கோடி செலவிடப்பட்டது.

இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது கவாச் விபத்து தடுப்பு கருவி தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு ரயில் இன்ஜின்களையும் நிறுத்திவிடும். ஒடிசா விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

The post விபத்து நடந்த வழித்தடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு கருவி பொருத்தப்படவில்லை: ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kawach ,India ,
× RELATED தெற்கு ரயில்வேயின் 25 வழித்தடங்களில்...