×

திருமாவளவன் வலியுறுத்தல் ஆணவக்குற்றங்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்

சென்னை: ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளி உட்பட 8 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்கள் பா.பா.மோகன், லஜபதி ராய் ஆகியோருக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழலில் ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டிய தேவையை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதை கடமையாகக் கருதுகிறோம். அந்த சட்டம் இயற்றப்படும் வரை இந்திய ஒன்றிய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அவற்றைச் செயல்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திருமாவளவன் வலியுறுத்தல் ஆணவக்குற்றங்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,VC ,President ,
× RELATED தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு