×

2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சாலைகள்: அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

வதோதரா: நாட்டில் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குஜராத்தின் வதோதரா நகரம் அருகே உள்ள துமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,‘‘2024ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து நெடுஞ்சாலைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்.

நாட்டில் நீங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் நல்ல தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை பார்க்கலாம். நமது நாடு மாறி வருகிறது. வளர்ந்த மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது பிரதமர மோடியின் கனவாகும். பிரதமரின் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு அவசியமாகும்” என்றார்.

The post 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சாலைகள்: அமைச்சர் நிதின் கட்கரி உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister Nitin Gadkari ,Vadodara ,Union Minister ,Nitin Gadkari ,Dinakaran ,
× RELATED குஜராத் மருந்து ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி