×

கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு செல்ல 6வது நாளாக தடை

தேனி: கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு 6வது நாளாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகா அணைப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி திரிவதால் சுருளி அருவிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அருகே உள்ள கம்பத்தில் கடந்த 27ம் தேதி காலை கம்பம் நகர் பகுதிக்குள் திடீரென வந்த அரிசிக்கொம்பன் யானை அங்கிருந்த பொது மக்களை விரட்டி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அரிசிக்கொம்பன் யானையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதகிப்பும் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு கம்பம் நகர் பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கம்பம் அருகே உள்ள சண்முகா நதி அணை பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற அரிசிக்கொம்பன் யானை அந்தப் பகுதியிலே சுற்றி திரிந்து வருகிறது.

அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 6வது நாளாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் யானையின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்காக முத்து, சுயம்பு, உதயன் என்கிற மூன்று கும்கி யானைகள் தயார் நிலையில் கம்பம் பகுதியில் வைத்திருக்கின்றனர்.

The post கம்பம் அருகே அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு செல்ல 6வது நாளாக தடை appeared first on Dinakaran.

Tags : Suruli ,Arisikkomban ,Kambam ,Suruli Falls ,Shanmukha Dam ,Arisikomban ,Dinakaran ,
× RELATED சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு