×

மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

 

ஈரோடு,ஜூன்2: ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தாளவாடி, அந்தியூர், பவானி, கோபி, கொடுமுடி, சத்தி போன்ற பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், நீலகிரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து, காய்கறிகள் வரத்தாகி விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், தொடர் முகூர்த்த நாட்கள் காரணமாக காய்கறிகளின் நுகர்வு அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளதால் நேற்று ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்திருந்தது. இதனால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

The post மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode V.U.C. ,Thalawadi ,Anthiyur ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...