×

ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏவிடம் அமலாக்கத்துறை விசாரணை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏவும் சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவருமான பிரதீப் யாதவ் வீட்டில் கடந்த ஆண்டு வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் எம்எல்ஏவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பிரதீப் யாதவ் கூறுகையில்:

என்னுடைய வீட்டில் நடத்திய சோதனையில் ஆட்சேபனைக்குரிய எந்த பொருளும் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு குறி வைத்து விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

The post ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏவிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jharkhand Cong. Enforcement department ,MLA ,Ranchi ,Jharkhand ,Assembly Congress ,Vice President ,Pradeep Yadav ,Dinakaran ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...