×

உலக பணக்காரர் பட்டியல் எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1

வாஷிங்டன்: உலக பணக்காரர் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார். எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக் காரான டெஸ்லாவினை தயாரித்தார். கார் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர் டிவிட்டரை அதிக விலை கொடுத்து வாங்கினார்.

இதனால் எல்.வி.எம். ஹச்ன் பங்குகள் எகிறியதால் அதன் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்க்கைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். ஆனால் தற்போது எல்.வி.எம். ஹச்ன் பங்குகள் 2.6 சதவிதம் சரிந்துள்ளது. இது அவரின் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக நம்பர் 2 இடத்தில் இருந்த எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பட்டத்தினைப் பெற்றார்.

The post உலக பணக்காரர் பட்டியல் எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Washington ,Arnold ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...