×

2019 உலக கோப்பையில் ராயுடு ஆடி இருக்க வேண்டும்: அனில்கும்ப்ளே பேட்டி

37 வயது மிடில் ஆர்டர் பேட்டரான சிஎஸ்கே வீரர் அம்பதிராயுடு, இந்த சீசனுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல்லில் அவர் 6 முறை பட்டம் வென்றுள்ளார். ஐபிஎல்லில் 204 போட்டியில் , ராயுடு 4348 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே, ராயுடு 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரை சேர்க்காதது பெரிய தவறு. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மிடில் ஆர்டரில் அவரை தயார் செய்துவிட்டு கடைசி நேரத்தில், அவருக்கு பதிலாக விஜய்சங்கரை சேர்த்துவிட்டனர்.

ராயுடு ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவர் ஸ்பின் மற்றும் வேகத்தை சமமாக விளையாடக்கூடிய வீரர். இது உண்மையிலேயே விசேஷமான ஒன்று. அவர் மிகவும் சிறப்பாக ஏதாவது செய்வார் என்று நான் உணர்ந்தேன், நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கேம் (ஐபிஎல் பைனல்) அவருக்கு நினைவில் இருக்கும், அவரும் என்னைப் போன்றவர், அடிக்கடி போனைப் பயன்படுத்துபவர் அல்ல. முக்கியமானது என்னவென்றால், அவர் ஒரு அற்புதமான வாழ்க்கையைப் பெற்றுள்ளார், மேலும் அவர் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அனுபவிப்பார் என்று நான் நம்புகிறேன், என்றார்.

The post 2019 உலக கோப்பையில் ராயுடு ஆடி இருக்க வேண்டும்: அனில்கும்ப்ளே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rayudu ,World Cup 2019 ,CSK ,Ampathirayudu ,IPL ,IPL… ,Anilkumble ,Dinakaran ,
× RELATED சிஎஸ்கே வீரர் டெவோன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்!