×

தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில் பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை அளிக்க பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை களிமேட்டில் 2022 ஏப்ரலில் நடந்த தேர் திருவிழாவில், தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; இச்சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக, தரை அடி கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில், கோயம்புத்தூர் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில், அவிநாசி அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் மற்றும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில், அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகிய திருத்தலங்களிலுள்ள தேரோடும் பாதைகளில் மேலே செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

The post தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Power Board ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Power Board ,Chariot ,Dinakaran ,
× RELATED ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்...