×

பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 4ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி..!!

மதுரை: சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 4ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் தங்கவும் அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர் வரத்து அதிகமாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு இந்த மாதம் சதுரகிரிக்கு வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 4ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Sadhuragiri Temple ,Paurnami ,Madurai ,Virudunagar District ,Vadruyiripa ,Pradasham ,Saturagiri Temple ,Pournami ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை