×

இந்திய பெருங்கடலில் 6 மணி நேரம் 4 ரபேல் போர் விமானங்கள் பயிற்சி

புதுடெல்லி: இந்திய பெருங்கடலில் 4 ரபேல் போர் விமானங்கள் திடீரென்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டன. ரபேல் போர் விமானங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியா விமானப் படையில் இணைக்கப்பட்டது. அரியானா மாநிலம் அம்பாலா படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இணைப்பு திருவிழா போன்று நடைபெற்றது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் ஹசிமாரா போர் விமான தளத்தில் இருந்து 4 ரபேல் போர் விமானங்கள் இந்திய பெருங்கடலில் சீறிப் பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டன.

பல விமானங்களுக்கு நடுவே பறந்து செல்வது, தாழ்வாக பறந்து இலக்கை அடைவது, இலக்குகளை துல்லியமாக தாக்கி விட்டு குறித்த நேரத்தில் திரும்பி வருவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 6 மணி நேரம் இந்த பயிற்சிகள் நீடித்தன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் ரபேல் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய பெருங்கடலில் 6 மணி நேரம் 4 ரபேல் போர் விமானங்கள் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Indian Ocean ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...