- ஆணையாளர்
- சங்கர் ஜிவால்
- பொலிஸ் குடும்பத் திருவிழா
- நந்தம்பாக்கம், சென்னை
- சென்னை
- சென்னை பெருநகர காவல்துறை தென் மண்டலம்
சென்னை: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு பெறும் ’’காவல் குடும்ப விழா‘‘வினை துவக்கி வைத்து போட்டிகளில் வென்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பரிசுகளை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கவும், உயரதிகாரிகளிடம் தங்களது தேவைகளை எடுத்துரைத்து, மகிழ்ச்சியுடன் பணிபுரியவும், ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு பெறும் கூடுவோம், கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி 02.10.2022 அன்று நடைபெற்றது. காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தின், காவல் குடும்ப விழாவினை, நேற்று (30.05.2023), நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தெற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஒன்று கூடி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டும், கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் கண்டு களித்தும், மகிழ்ந்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் போட்டிகளில் வென்ற காவல் அலுவலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் விதமாக, தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்புரையாற்றினர். பின்னர் நடைபெற்ற உணவு விருந்தில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து பேசி உணவருந்தினர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் J.லோகநாதன் (தலைமையிடம்) பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), தெற்கு மண்டல இணை ஆணையாளர்.M.R.சிபி சக்ரவர்த்தி, வடக்கு மண்டல இணை ஆணையாளர் R.V.ரம்யபாரதி, மேற்கு மண்டல இணை ஆணையாளர் M.மனோகர், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் என 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
The post சென்னை நந்தம்பாக்கத்தில் காவல் குடும்ப விழாவினை துவக்கி வைத்து போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.